/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கால்வாய் அமைக்கும் பணி துவங்கியாச்சு
/
கால்வாய் அமைக்கும் பணி துவங்கியாச்சு
ADDED : ஏப் 17, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு, ;கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் கால்வாய் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டின் இரு புறங்களிலும் ஏராளமான கடைகள், வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ளது. இந்நிலையில், ரோட்டின் ஓரத்தில் கால்வாய் இல்லாததால், மழை நீர் அதிகமாக வீட்டின் ஓரத்தில் வழிந்தோடியது.
அவ்வப்போது, இப்பகுதியில் சிலர் கழிவு நீரை வீட்டின் வெளிப்புறத்தில் வெளியேற்றுகின்றனர். தற்போது, இதை சரி செய்ய பேரூராட்சி நிர்வாகம் சார்பில், 15வது நிதி குழுவில் இருந்து, 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக, 225 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.

