ADDED : ஏப் 05, 2026 05:30 PM

கோவை: அதுவரை 'ஏசி' காரில் மொடமொடக்கும் சட்டையணிந்து பயணிக்கும் அரசியல்வாதிகள், தேர்தல் துவங்கி விட்டாலே, எந்த வேலைக்கும் தயாராகி விடுவர்.
வேலை பார்த்துக்கொண்டிருக்கும் துாய்மை பணியாளரிடம் விளக்குமாற்றை வாங்கி, சுத்தம் செய்வர். ஏதுமறியாத டீக்கடைக்காரரை ஒதுங்க சொல்லி விட்டு, டீ ஆற்றி காண்பிப்பர். தட்டுக்கடையில் தோசை ஊற்றுவர். இப்படியெல்லாம் செய்தால் ஓட்டு கிடைத்து விடும் என்று யார் சொன்னார்கள் தெரியவில்லை.
இந்த வரிசையில் சிங்காநல்லுார் அ.தி.மு.க.வேட்பாளர் ஜெயராமும் சேர்ந்து கொண்டார். சர்ச் ரோட்டில் இஸ்திரி கடையில் 'டி சர்ட்' ஒன்றை இஸ்திரி செய்து ஓட்டு சேகரித்தார். பின், மளிகை கடை உரிமையாளர்களிடம் ஓட்டு சேகரித்தார்.
பின் நஞ்சுண்டாபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். பாரதி நகர் 1-6 வீதிகள், சர்ச் ரோடு, கருணாநிதி நகர் உள்ளிட்ட பகுதி மக்களிடம் 'அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்' என உறுதி அளித்தார்.
