/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வண்டிக்கு துளியும் கிடையாது பாதுகாப்பு!
/
வண்டிக்கு துளியும் கிடையாது பாதுகாப்பு!
ADDED : ஜூலை 20, 2025 11:04 PM

கோவை மாநகராட்சி சார்பில் டூவீலர், கார் பார்க்கிங் ஸ்டாண்ட்கள் நடத்தப்படுகின்றன. இதற்கென, ஏல முறையில் ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டணம் வாங்குவதோடு சரி; பல 'பார்க்கிங்' இடங்கள் பராமரிக்காத காரணத்தால், படுமோசமாக காணப்படுகின்றன.
போதிய வசதி ஏற்படுத்தாததால் மழை, வெயிலில் திறந்த வெளியில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. மண் தரையில் மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாற, வாகன ஓட்டிகள் வாகனங்களை நகர்த்தவே சிரமப்படுகின்றனர். வாகனங்களை நெரிசல்களில் நிறுத்துவதால், கண்ணாடி, சைடு ஸ்டாண்ட் உள்ளிட்ட பாகங்களும் உடைகின்றன.
சில இடங்களில் பெட்ரோல், ஹெல்மெட் திருட்டு சம்பவங்களும் நடக்கின்றன. திருட்டு வாகனங்களும் இந்த இடங்களில், 'பார்க்' செய்யப்படுகின்றன.
சில அரசு அலுவலகங்களில், வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இருந்தும், சரியாக பராமரிக்காததால் புதர் மண்டி காட்சியளிக்கின்றன.
பார்க்கிங் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், போதிய வசதிகளை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.