/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயானம் முழுக்க கழிவு நீர்; கலெக்டரிடம் மக்கள் மனு
/
மயானம் முழுக்க கழிவு நீர்; கலெக்டரிடம் மக்கள் மனு
ADDED : ஜூலை 02, 2025 11:38 PM
கோவை; இடிகரை மணியகாரன்பாளையம் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு, புதுப்பாளையத்தில் மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று, அக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.
இடிகரைக்கு அருகே மணியகாரன் பாளையத்தில் வசிக்கும் மக்களுக்கு, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள புதுப்பாளையத்தில், கவுசிகா நதியின் கிளை ஓடை அமைந்துள்ள பகுதியில் மயானம் அமைந்திருந்தது.
தற்போது புதுப்பாளையம் தடுப்பணை முழுக்க, கழிவுநீரால் நிரம்பி வழிந்து வெளியேறி பட்டியலின மக்களுக்கான மயானம் முழுக்க, கழிவுநீர் நிரம்பி நிற்கிறது. அதனால் இறுதி சடங்குகளோ, தகனமோ செய்யமுடியாத நிலை நீடிக்கிறது.
அதனால் கழிவுநீரை வெளியேற்றி, சுத்தப்படுத்திக்கொடுக்க வேண்டும் அல்லது வேறு பகுதியில் மயானம் அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனுக்கொடுத்தனர்.