/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட்டமலை ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
/
வட்டமலை ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
வட்டமலை ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
வட்டமலை ஆண்டவர் கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா
ADDED : ஏப் 03, 2025 11:51 PM
அன்னுார்; குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் பங்குனி தேர்த் திருவிழா, வரும் 6ம் தேதி துவங்குகிறது.
குமாரபாளையத்தில் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் வளாகத்தில், பல நுாறு ஆண்டுகளாக வற்றாத சுனை உள்ளது.
இக்கோவிலில் 16ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா, வரும் 6ம் தேதி காலை 10:00 மணிக்கு கிராம தேவதை வழிபாடுடன் துவங்குகிறது. இரவு 8:00 மணிக்கு கிராம சாந்தி நடக்கிறது.
வரும் 7ம் தேதி காலை கணபதி பூஜை உடன் கொடியேற்றப்படுகிறது. மாலையில் யாகசாலை பூஜையும், முருகப்பெருமான் உட்பிரகாரத்தில் உலா வருதலும் நடக்கிறது.
வரும் 8ம் தேதியும், 9ம் தேதியும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜை நடக்கிறது. சுவாமி உட்பிரகார உலா நடைபெறுகிறது. வரும் 10-ம் தேதி மாலை 5:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
யானை வாகனத்தில் சுவாமி உலா வருகிறார். வரும் 8ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளுகிறார். காலை 10:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு வட்டமலை ஆண்டவர் கலைக்குழுவின் கும்மியாட்டம் நடக்கிறது.

