/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
15 முறை கோவை வந்த முதல்வர்: பயணங்களும் பயன்களும்!
/
15 முறை கோவை வந்த முதல்வர்: பயணங்களும் பயன்களும்!
ADDED : நவ 25, 2025 07:00 AM

கடந்த 2021 ல் முதல்வராக பொறுப்பேற்றது முதல் மு.க.ஸ்டாலின் இதுவரை கோவை மாவட்டத்துக்கு 15 முறை வருகை தந்து, பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளார்.
கவச உடையில் கொரோனா ஆய்வு
29.5.21 அன்று கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பி.பி.இ. பாதுகாப்பு ஆடையில் கொரோனா நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்கு தலா 10
வீதம், 50 ஆம்புலன்ஸ் கார்களை வழங்கி சேவையை தொடங்கி வைத்தார்.
24.8.22 ஈச்சனாரி விழாவில் 81,486 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விசைத்தறி சங்கங்கள் பாராட்டு
11.3.23 கருமத்தம்பட்டியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் நன்றி அறிவிப்பு பாராட்டு விழாவில் பங்கேற்றார்
செம்மொழிப் பூங்கா அடிக்கல்
18.12.23 ஆவாரம்பாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். காந்திபுரத்தில் 165 ஏக்கர் பரப்பில் செம்மொழிப் பூங்கா நிறுவ அடிக்கல் நாட்டினார்.
உக்கடம் ஆத்துப்பாலம்
9.8.24 கோவை அரசு கலைக்கல்லூரியில் தமிழ்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார். ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
தகவல் தொழில்நுட்ப கட்டடம்
5.11.24 விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 லட்சம் செலவில் 2,94 லட்சம் சதுர அடி பரப்புள்ள தகவல் தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைத்தார்.
நில எடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட 468.89 ஏக்கர் நிலங்களுக்குரிய ஆணைகளை நில உரிமையாளர்களுக்கு வழங்கினார்.
குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை
குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் கட்டப்படும் தொழிலாளர்கள் தங்கும் விடுதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
6.11.24 அன்று அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் பெரியார் நூலகம் - அறிவியல் மையம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
9.10.25 அன்று கொடிசியா வளாகத்தில் புத்தொழில் மாநாடு தொடங்கி வைத்து, தமிழ்நாடு புத்தொழில் சூழமைவு அறிக்கை வெளியிட்டார்.
ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு
கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1791 கோடி செலவில் கட்டிய தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கி.மீ. நீள மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தார்.
9.10.25 அன்று குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 126 கோடியில் அமையும் தங்க நகை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார்.
இவற்றின் பயனாக கொங்கு மண்டலம் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற மண்டலமாக திகழ்கிறது.

