/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
9 நிமிடங்களில் முடிந்த கோவை மாநகராட்சி கூட்டம்
/
9 நிமிடங்களில் முடிந்த கோவை மாநகராட்சி கூட்டம்
ADDED : ஜூலை 08, 2024 11:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ராஜினாமா செய்த நிலையில், மாமன்றத்தின் சிறப்பு கூட்டம் இன்று( ஜூலை 08) நடந்தது. இந்தக் கூட்டத்தில் மேயர் ராஜினாமா குறித்து கமிஷனர் அறிவித்தார். அப்போது, ராஜினாமாவுக்கு காரணம் என்ன என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதனால், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து 9 நிமிடங்களில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மேயர் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
நெல்லை
இன்று நடந்த நெல்லை மாநகராட்சி சிறப்புக் கூட்டத்திலும் மேயரின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது என அறிவிக்கப்பட்டது.