/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கோவை விழா' பாடல் இன்று மாலை வெளியீடு
/
'கோவை விழா' பாடல் இன்று மாலை வெளியீடு
ADDED : அக் 26, 2024 06:37 AM
கோவை: 'ரிதம் ஆப் கோயமுத்துார்' என்ற தலைப்பில், கோயமுத்துார் விழா 17வது பதிப்புக்கான புதிய பாடல், இன்று (அக்., 26) வெளியிடப்படுகிறது; திரைப்பட நடிகர் சத்யராஜ் பங்கேற்கிறார்.
நவ., 23 முதல் டிச., 1 வரை, 10 நாட்கள், 'கோயமுத்துார் விழா' நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது; 17வது ஆண்டு விழாவாக இந்தாண்டு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
அதில், மாரத்தான், சைக்கிள் போட்டி, தனித்திறன் வெளிப்படுத்தும் போட்டி, ஆர்ட் ஸ்ட்ரீட், பைக் ரேலி, குறும்படங்கள் வெளியீடு, 'மியூசிக் கான்செர்ட்' உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளன.
இதற்கு முன்னோட்டமாக, 'கோயமுத்துார் விழா'வுக்கான புதிய பாடல், சரவணம்பட்டியில் உள்ள 'ப்ரோசோன்' மாலில் இன்று மாலை, 5:30 மணிக்கு வெளியிடப்படுகிறது; திரைப்பட நடிகர் சத்யராஜ், பாடலை வெளியிடுகிறார்.
கலெக்டர் கிராந்திகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். பாடலை ஆதித்யா, விஜய் விக்கி ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளை ரமேஷ் வெங்கட் எழுதியுள்ளார்.
கோயமுத்துார் விழாவுக்கான ஏற்பாடுகளை அருண் செந்தில்நாதன், சவுமியா காயத்ரி, சரிதா லட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர். நிகழ்ச்சி தொடர்பான விபரங்கள் அறிய, www.coimbatorevizha.theticket9.com என்ற முகவரியை பார்வையிடலாம் அல்லது, 96005 74888 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.