/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு, வீடாக சென்று பட்டா வழங்கிய கலெக்டர் உங்களை தேடி உங்கள் ஊரில் அமர்க்களம்
/
வீடு, வீடாக சென்று பட்டா வழங்கிய கலெக்டர் உங்களை தேடி உங்கள் ஊரில் அமர்க்களம்
வீடு, வீடாக சென்று பட்டா வழங்கிய கலெக்டர் உங்களை தேடி உங்கள் ஊரில் அமர்க்களம்
வீடு, வீடாக சென்று பட்டா வழங்கிய கலெக்டர் உங்களை தேடி உங்கள் ஊரில் அமர்க்களம்
ADDED : பிப் 22, 2024 10:51 PM

ஆனைமலை:ஆனைமலை அருகே வீடு, வீடாக சென்று மக்களுக்கு கோவை மாவட்ட கலெக்டர் பட்டா வழங்கினார்.
ஆனைமலையில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் இரு நாட்களாக கள ஆய்வு மேற்கொண்டனர். சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆனைமலை வி.ஆர்.டி., பள்ளியில், ஆனைமலை மக்கள் நல அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சியை கலெக்டர் துவக்கி வைத்தார். நரசிம்மன் நகரில், இல்லம் தேடி கல்வி மையத்தை ஆய்வு செய்து, கற்பிக்கும் முறை, கற்றலில் மாணவர்கள் ஆர்வம் குறித்து தன்னார்வலரிடம் கேட்டறிந்தார்.
அதில், சரளப்பதி பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்களை வீடு தேடிச்சென்று கலெக்டர் வழங்கினார். மொத்தம், 73 பேருக்கு இ - பட்டா வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆனைமலை கிளை நுாலகத்தில் ஆய்வு செய்தார்.
பழைய சர்க்கார்பதி பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, மக்கள் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
அதற்கு, மாவட்ட கலெக்டர், 'வனப்பகுதியையொட்டி உள்ள பகுதியில் மக்கும், மக்காத குப்பை பிரித்து வழங்க பயிற்சி கொடுக்க வேண்டும். வாரத்துக்கு ஒரு முறை மக்காத குப்பை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
ஆனைமலை தொடக்கப்பள்ளியில், காலை உணவுத்திட்ட உணவை சாப்பிட்டு ஆய்வு செய்தார்.சின்னப்பம்பாளையம் கிராமத்தில் பேரூராட்சியால் செயல்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஆனைமலையில் நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை ஆய்வு செய்தார். இரண்டு நாள் கள ஆய்வு நேற்று காலையுடன் நிறைவடைந்தது.
மாவட்ட கலெக்டர் கிராமத்தில் தங்கி, மக்கள் பிரச்னைகளை கேட்டறிந்து, அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்தை, மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதையே, முன்னறிவிப்பின்றி, வாரம் ஒரு முறை ஒரு கிராமத்துக்கு கலெக்டர் 'விசிட்' செய்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர் மக்கள்.