தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லுாரிக்கு சுற்றுச்சுவரில்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

கல்லுாரிக்கு சுற்றுச்சுவரில்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

கல்லுாரிக்கு சுற்றுச்சுவரில்லை; கேள்விக்குறியாகும் பாதுகாப்பு


ADDED : மார் 26, 2025 09:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2025 09:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வால்பாறை ; அரசு கலைக்கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், மாணவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.

வால்பாறை நகரில் உள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தற்போது, 926 மாணவர்கள் படிக்கின்றனர். கல்லுாரி வளாகத்தில் பின்பக்கம் சுற்றுச்சுவர் இல்லை. இதே போல், முதலாமாண்டு மாணவர்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர் இல்லை. இதனால், கல்லுாரிக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் கூறியதாவது:

வால்பாறை அரசு கல்லுாரியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர். பள்ளி விளையாட்டு மைதானத்தில் தனியார் ஒப்பந்த பணியாளர்கள், மண் நிரப்பியுள்ளதால் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

மேலும், கல்லுாரியின் பின்புறம் சுற்றுச்சுவர் இல்லாததால் பாதுகாப்பில்லாத நிலை உள்ளதோடு, இரவு நேரத்தில் சமூக விரோதிகள் நடமாடும் இடமாகவும் கல்லுாரி வளாகம் மாறிவருகிறது. மாணவர்கள் பாதுகாப்பு கருதி, கல்லுாரியை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி, சுற்றுச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us