/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கலாகிறது! பழைய திட்டங்களுக்கு உயிரூட்ட எதிர்பார்ப்பு
/
மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கலாகிறது! பழைய திட்டங்களுக்கு உயிரூட்ட எதிர்பார்ப்பு
மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கலாகிறது! பழைய திட்டங்களுக்கு உயிரூட்ட எதிர்பார்ப்பு
மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கலாகிறது! பழைய திட்டங்களுக்கு உயிரூட்ட எதிர்பார்ப்பு
ADDED : மார் 27, 2025 11:55 PM
கோவை: கோவை மாநகராட்சியின், 2025-26ம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்ட அறிக்கை (பட்ஜெட்) இன்று (28ம் தேதி) மதியம், 12:00 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
கோவை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம், இன்று (28ம் தேதி) காலை, 10:30 மணிக்கு மேயர் ரங்கநாயகி தலைமையில் நடக்கிறது. 132 தீர்மானங்கள் விவாதத்துக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் மன்ற கூட்டத்தை முடிக்க ஆலோசிக்கப்பட்டு உள்ளது. மதியம், 12:00 மணிக்கு, பட்ஜெட் தாக்கல் செய்யும் சிறப்பு கூட்டம் துவங்குகிறது.
வரி விதிப்பு குழு தலைவர் முபஷீரா, வரவு - செலவு திட்ட அறிக்கையை, மேயரிடம் சமர்ப்பிக்க உள்ளார். அதன் மீதான உரையை, மேயர் நிகழ்த்த உள்ளார். கடந்த நிதியாண்டில் அறிவித்த திட்டங்களின் தற்போதைய நிலை, நடப்பு நிதியாண்டில் ஒதுக்கும் நிதி, புதிதாக அறிவிக்கும் திட்டங்களை வெளியிட இருக்கிறார்.
2024-25ம் நிதியாண்டில், ரூ.3,182.21 கோடி வருவாய் கிடைக்கும்; ரூ.3,300.44 கோடி செலவு ஏற்படலாம் என கணக்கிட்டு, ரூ.118.23 கோடி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, கடந்தாண்டு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 'ட்ரோன்' சர்வே எடுத்து சொத்து வரி மறுசீராய்வு செய்திருப்பதால், மாநகராட்சி வருவாய் அதிகரித்திருக்கிறது. சொத்து வரி வசூல் தொடர்பாக, மத்திய அரசு நிர்ணயித்த சதவீதத்தையும் எட்டி விட்டது. அதனால், வரி வருவாய் அதிகரித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கடந்த பட்ஜெட்டில் அறிவித்த பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தவில்லை. குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவியருக்கு அடையாள அட்டை, பெல்ட் வழங்கும் திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சீதாலட்சுமி மகப்பேறு மருத்துவமனையில் 'டயாலசிஸ் சென்டர்' அமைக்கவில்லை. தாய்-சேய் நலம் அறிய அழைப்பு மையம் ஏற்படுத்தவில்லை.
துாய்மை பாரதம் 2.0 திட்டத்தில், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, டவுன்ஹால், நுாறடி ரோடு, ஆர்.எஸ்.புரம், சாயிபாபா காலனி, சுந்தராபுரம், திருச்சி ரோடு மற்றும் வெளியூர் பஸ்கள் நிறுத்தும் இடங்களில் இரண்டு குப்பை பெட்டிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது; இத்திட்டமும் செயல்பாட்டுக்கு வரவில்லை. விளாங்குறிச்சி ரோடு - 'எஸ்' வளைவு பகுதியில் அபிவிருத்தி பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டடது; இன்னும் பணிகள் துவங்கவில்லை. இதேபோல், கடந்த ஆண்டுகளில் அறிவித்து செயல்படுத்தாத திட்டங்களுக்கு நடப்பாண்டு நிதி ஒதுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.