/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கட் ரோடுகளை' கட்டாயம் சீரமைக்க உத்தரவிட்டார் மாநகராட்சி கமிஷனர்
/
'கட் ரோடுகளை' கட்டாயம் சீரமைக்க உத்தரவிட்டார் மாநகராட்சி கமிஷனர்
'கட் ரோடுகளை' கட்டாயம் சீரமைக்க உத்தரவிட்டார் மாநகராட்சி கமிஷனர்
'கட் ரோடுகளை' கட்டாயம் சீரமைக்க உத்தரவிட்டார் மாநகராட்சி கமிஷனர்
ADDED : ஏப் 21, 2025 10:08 PM
கோவை, ;மோசமான ரோடுகளால் வாகன ஓட்டிகள் திணறுவதாக, நமது நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, உடனடியாக சீர் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி பகுதிகளில் குறிப்பாக புலியகுளம், கே.கே. புதுார் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள 'கட்' ரோடுகள், மிகவும் மோசமாக இருப்பதாக, நமது நாளிதழில் நேற்று, 'கந்தல் துணியாக 'கட்' ரோடு; கடந்து செல்ல படாதபாடு' என்ற தலைப்பில், 'படமும் பாடமும்' பகுதியில் செய்தி மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டன.
இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ரோடு சேதமடைந்துள்ள பகுதிகளுக்கு 'விசிட்' செய்தார். மாநகராட்சி, 85வது வார்டு குறிச்சி, விநாயகர் நகர், காந்திஜி சாலை, 94வது வார்டு சுந்தராபுரம், பழனியப்பா தியேட்டர் அருகே, இடையர்பாளையம் பிரதான சாலை, கிழக்கு மண்டலம், 50வது வார்டு புலியகுளம் ரோடு ஆகிய இடங்களில், ஆய்வு செய்தார்.
செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பகுதிகளிலும், மோசமான நிலையில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க, அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.