/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இரு வாரங்களுக்கு நடக்கிறது
/
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இரு வாரங்களுக்கு நடக்கிறது
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இரு வாரங்களுக்கு நடக்கிறது
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இரு வாரங்களுக்கு நடக்கிறது
ADDED : ஏப் 21, 2025 09:24 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது.
தமிழகத்தில், சமீபத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து, முதற்கட்டமாக, பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டது. நேற்று முதல், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோவை ரோடு, பி.கே.டி., பள்ளியில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டிருந்தது.விடைத்தாள் திருத்தும் பணிக்கு, முகாம் அலுவலர் முன்னிலையில், அறையிலிருந்து விடைத்தாள்கள் வழங்கப்பட்டன.
நேற்று, முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டனர். அலுவலர்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்தனர்.
கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது. முகாமில், மொத்தம், 48 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவி தேர்வாளர்கள் மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் என, 500க்கும் மேற்பட்டவர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரு வாரங்களில், இப்பணி நிறைவு பெறும். துல்லியமாகவும், சரியாகவும் திருத்த வேண்டும். மதிப்பெண்கள் விடுபட்டு விடக் கூடாது; பொறுமையாக திருத்தி, மதிப்பெண் கூட்டலை சரிபார்க்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினர்.