/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை வாகனம் இயக்கிய கவுன்சிலர்
/
குப்பை வாகனம் இயக்கிய கவுன்சிலர்
ADDED : ஜன 09, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:டிரைவர் விடுப்பில் சென்றதால், மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் நேற்று குப்பை வாகனத்தை இயக்கி சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.
மாநகராட்சி, 86வது வார்டு உக்கடம், புல்லுக்காடு, அன்புநகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், இங்கு குப்பை சேகரிப்பு வாகனத்தை இயக்கும் டிரைவர் சபரிமலைக்கு சென்ற தகவல் அறிந்த வார்டு கவுன்சிலர் அஹமது கபீர், குப்பை தேக்கத்தை தவிர்க்கும் விதமாக அவரே வாகனத்தை நேற்று இயக்கியுள்ளார். துாய்மை பணியாளர்கள் உடன் இணைந்து குப்பை அகற்றும் பணியில் கவுன்சிலர் ஈடுபட்டதை, அப்பகுதி மக்கள் பாராட்டினர்.