/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாட்டின் பாதுகாப்புத் துறை வலிமையாக மாறி வருகிறது'
/
'நாட்டின் பாதுகாப்புத் துறை வலிமையாக மாறி வருகிறது'
'நாட்டின் பாதுகாப்புத் துறை வலிமையாக மாறி வருகிறது'
'நாட்டின் பாதுகாப்புத் துறை வலிமையாக மாறி வருகிறது'
ADDED : ஜூலை 31, 2025 10:12 PM

கோவை; ''நாட்டின் பாதுகாப்புத் துறை வலிமையாக மாறி வருகிறது,'' என, டி.ஆர்.டி.ஓ., முன்னாள் தலைமை நிர்வாக அலுவலர்சிவதாணுப்பிள்ளை பேசினார்.
குமரகுரு தொழில் ஆராய்ச்சி, புத்தாக்க மையத்தின்(கே.சி.ஐ.ஆர்.ஐ.,) எட்டாவது ஆண்டு விழா குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நடந்தது.
டி.ஆர்.டி.ஓ., வின் முன்னாள் தலைமை நிர்வாக அலுவலர் சிவதாணுப்பிள்ளை பேசுகையில், ''பொருளாதார வலிமையுடன் ஒரு வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்ற நாட்டின் இளைஞர்கள் உழைக்க வேண்டும் என, அப்துல் கலாம் விரும்பினார். நாட்டின் பாதுகாப்புத் துறை வலிமையாகவும், தன்னம்பிக்கையுடனும் மாறி வரு கிறது. தற்போதுள்ள 800 மில்லியன் இளைஞர்கள் திறமையும், உறுதியும் கொண்டவர்களாக மாற்றப்பட்டால், எதிர்காலத்தில் டாக்டர் கலாம் விரும்பியபடி இந்தியா ஒரு வல்லரசாக மாற முடியும்,'' என்றார். முன்னதாக,விழாவில், கே.சி.ஐ. ஆர்.ஐ., ஏவியோனிக்ஸ் ஆராய்ச்சி மையத்தை சூலுார் 5 வது தள பழுதுபார்க்கும் பட்டறை விமானப்படை தளபதி ஏர் கமாண்டர் ஸ்ரீதர் திறந்து வைத்தார். குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வணவராயர், கே.சி.ஐ.ஆர்.ஐ., இயக்குநர் வசந்தராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.