UPDATED : நவ 25, 2026 06:18 PM
ADDED : நவ 25, 2026 06:18 PM

அ நிறம் | அளவு
கோவை:
வரி செலுத்தும் பொதுமக்களின் அடிப்படையான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மா.கம்யூ. சார்பில் பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
ம.கம்யூ. ஒன்றிய குழு உறுப்பினர் சிவராஜன் தலைமை வகித்தார். உள்ளாட்சி மன்றங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மத்திய, மாநில அரசுகளின் திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பன, உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மா.கம்யூ. மாவட்ட செயலாளர் பத்மநாபன், ஒன்றிய செயலாளர் கோகுலகிருஷ்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் செல்வராஜ் மற்றும் கிளைச் செயலாளர்கள் கருப்புசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
