தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தீயில் கருகிய மரக்கன்றுகள் குப்பைகளால் வந்த ஆபத்து

 தீயில் கருகிய மரக்கன்றுகள் குப்பைகளால் வந்த ஆபத்து

 தீயில் கருகிய மரக்கன்றுகள் குப்பைகளால் வந்த ஆபத்து


ADDED : ஜன 16, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 05:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் - தென் திருப்பதி ரோட்டில், நெடுஞ்சாலை துறையினரால் நடப்பட்ட மரக்கன்றுகள் தீயில் கருகி நாசமானது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து அன்னூர் வழியாக அவிநாசி வரை உள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்டதாகும். அவிநாசியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 38 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள இந்த சாலையை, நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தி, தமிழக அரசு அறிவித்தது. கோவை கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக, 800-க்கும் மேற்பட்ட புளிய மரங்கள் வெட்டப்பட்டன. இந்த மரங்களுக்கு ஈடாக புதிதாக மரக்கன்றுகளை நட மாநில நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, இச்சாலையில், காரமடை -சிறுமுகை, அன்னூர் - சிறுமுகை, இரும்பறை உள்ளிட்ட பகுயிகளில் வேம்பு, மகாகனி என பல்வேறு வகையிலான 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இதில், காரமடை சிறுமுகை ரோட்டில் தென்திருப்பதி அருகே சாலையோரம் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு அருகில் இருந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.

இதனால் குப்பைகள் தீயில் கருகி சாம்பலானது. இந்த தீயின் தாக்கத்தினால் சுமார் 7 மரக்கன்றுகள் தீயில் கருகி நாசமானது.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் உட்கோட்ட மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுவரை சுமார் 3,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும், 1000 மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளோம். இதுபோன்ற செயல்கள் வருத்தம் அளிக்கின்றன, என்றார்.--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us