/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அசுரவதம் துவங்கியது; தர்மம் வெல்லட்டும்!'
/
'அசுரவதம் துவங்கியது; தர்மம் வெல்லட்டும்!'
ADDED : மே 08, 2025 01:30 AM

பொள்ளாச்சி; ''அதர்மம் அழிந்து தர்மம் வெற்றி பெறும்,'' என ஆர்ஷ வித்யா பீடம் ததேவாநந்த சுவாமிகள் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிடப்பட்டு, இந்தியா முழுவதும் போர்க்கால ஒத்திகையை மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், இந்திய ராணுவம் 'ஆப்பரேசன் சிந்துார்' என்ற பெயரில் பயங்கரவாதிகளின், ஒன்பது முகாம்கள் மீது இந்திய விமான படை தாக்குதலை நடத்தியது.
இந்தியா ராணுவத்துக்கு துணை நிற்போம் என சமூக வலைதளங்கள் வாயிலாக மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஆனைமலை ஆர்ஷ வித்யா பீடம் பூஜ்யஸ்ரீ ததேவாநந்த சுவாமிகள் கூறுகையில், ''பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா போர் நடத்த துவங்கியுள்ளது. இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக நிற்போம். பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும். இந்திய ராணுவத்துக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம். தற்போது அசுரவதம் துவங்கிவிட்டது; அழியட்டும் அதர்மம்; தர்மம் வெல்லட்டும்,'' என்றார்.