/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இனிதே நிறைவு பெற்றது தினமலர் 'வழிகாட்டி!'
/
இனிதே நிறைவு பெற்றது தினமலர் 'வழிகாட்டி!'
ADDED : மார் 29, 2025 06:33 AM

கோவை : உயர்கல்விக்கு வழிகாட்ட, 'தினமலர்' நாளிதழ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்கள் சார்பில், கடந்த மூன்று நாட்களாக கொடிசியா அரங்கில் நடந்த, உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, இனிதே நிறைவு பெற்றது.
நடப்பாண்டில், 138 கல்லுாரிகளின் ஸ்டால்கள் இடம் பெற்றன. பல்வேறு துறைகளை சார்ந்த, 25 வல்லுநர்கள் மாணவர்களுக்கு கல்லுாரி, துறை தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேவையான விளக்கங்களைஅளித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று, ஏராளமான மாணவர்கள், பெற்றோர் பங்கேற்று பயன் அடைந்தனர்.
கரம் கோர்த்தவர்கள்
வழிகாட்டி நிகழ்வை, 'தினமலர்' நாளிதழுடன், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கியது. பக்கபலமாக ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், அமிர்தா பல்கலை விளங்கினர்.
ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங், தொழில்நுட்பக் கல்லுாரி, ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜினியரிங் கல்லுாரி, கே.எம்.சி.எச்., அண்ட் டாக்டர் என்.ஜி.பி., கல்வி நிறுவனங்கள், கற்பகம் கல்வி நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள், ரத்தினம் குழும கல்வி நிறுவனங்கள், பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, கோவை சி.எம்.எஸ்., கல்வி நிறுவனங்கள், திருப்பூர் கே.எம்.சி., சட்டக்கல்லுாரி, ராஜலட்சுமி தொழில்நுட்பக்கல்லுாரி, இந்திய பட்டயக்கணக்காளர்கள் இன்ஸ்ட்டிடியூட் இணைந்து வழங்கின.