/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட மைய நுாலகத்துக்கு புதுப்பொலிவு கிடைக்கப்போகிறது
/
மாவட்ட மைய நுாலகத்துக்கு புதுப்பொலிவு கிடைக்கப்போகிறது
மாவட்ட மைய நுாலகத்துக்கு புதுப்பொலிவு கிடைக்கப்போகிறது
மாவட்ட மைய நுாலகத்துக்கு புதுப்பொலிவு கிடைக்கப்போகிறது
ADDED : ஜூலை 22, 2025 10:51 PM

கோவை; கோவை மாவட்ட மைய நுாலகம், விரைவில் புதுப்பொலிவுடன் செயல்பட இருப்பதாக, கோவை மாவட்ட நுாலக அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோட்டில், கோவை மாவட்ட மைய நுாலகம் செயல்படுகிறது. இரண்டு தளங்கள் கொண்ட இந்த நுாலகத்தில், பத்திரிகை மற்றும் வார, மாத இதழ்கள் படிக்க தனிப்பிரிவும், கட்டுரை நுால்கள் படிக்க, தனி பிரிவும் உள்ளது. இவற்றுடன் சிவில் சர்வீசஸ் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு தனிப்பிரிவும் செயல்படுகிறது.
தினமும், 600க்கு மேற்பட்ட வாசகர்கள் படிக்க வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது.
இந்த நுாலகம், பல ஆண்டுகளாக மராமத்து பணிகள் எதுவும் செய்யப்படாமல் இருந்தது. வசதி குறைபாடுகளை சரி செய்ய, வாசகர்கள் மாவட்ட நுாலகத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மராமத்து பணிகள் செய்து முழுமையாக புதுப்பிக்க, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, வேலைகள் நடந்து வருகின்றன.
மாவட்ட நுாலக ஆணைக்குழு அலுவலர் ராஜேந்திரன் (பொறுப்பு) கூறியதாவது:
கோவையில் அனைத்து நுாலகங்களுக்கும், தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, முழுநேரமாக செயல்படும் நுாலகங்களை புதுப்பிக்கும் பணிகள் நடக்கின்றன. கோவை மாவட்ட மைய நுாலகத்தை புதுப்பிக்கும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் பணிகள் முடிந்துவிடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.