UPDATED : அக் 22, 2026 06:11 PM
ADDED : அக் 22, 2026 06:06 PM

அன்னூர்: நாய் கருத்தடை மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். அன்னூர் நகரில், 200க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் வீதிகளில் சுற்றித் திரிகின்றன.
இந்த நாய்கள் தென்னம்பாளையம் ரோடு, சி.எஸ்.ஆர். நகர், கூத்தாண்டவர் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகளை துரத்தி துரத்தி அச்சுறுத்துகின்றன.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'குன்னத்தூராம் பாளையத்தில், பேரூராட்சிக்கு சொந்தமான நாய் கருத்தடை மையம் உள்ளது. ஆனால் இந்த மையத்தில் போதுமான உபகரணங்கள் இல்லை. மையம் செயல்படுவதில்லை. பல லட்சம் ரூபாய் செலவழித்து கட்டப்பட்ட நாய் கருத்தடை மையம் வெறும் காட்சி பொருளாக உள்ளது.
தற்போது பேரூராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்தால் அன்னூர் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு கருத்தடை சிகிச்சை செய்கின்றனர்.
செயல்படாமல் உள்ள பேரூராட்சி கருத்தடை மையத்தில் உபகரணங்களை நிறுவி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். பொது மக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்தில் கருத்தடை செய்ய வேண்டும்,' என்றனர்.
