/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருடும்போது நாய் 'லொள்'; விழுந்தது அரிவாள் வெட்டு
/
திருடும்போது நாய் 'லொள்'; விழுந்தது அரிவாள் வெட்டு
திருடும்போது நாய் 'லொள்'; விழுந்தது அரிவாள் வெட்டு
திருடும்போது நாய் 'லொள்'; விழுந்தது அரிவாள் வெட்டு
ADDED : பிப் 20, 2025 06:18 AM
தொண்டாமுத்தூர்; வண்டிக்காரனூர் பிரிவு, திருமுருகன் நகரை சேர்ந்தவர் திருமுருகன்,39. தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்று வருகிறார். இவர், வீட்டில், ஜானி என்ற நாயை வளர்த்து வருகிறார்.
கடந்த, 15ம் தேதி இரவு, நாயை வீட்டின் வளாகத்தில் கட்டி வைத்துள்ளனர். நள்ளிரவில், திருமுருகனின் வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில், அதே பகுதியை சேர்ந்த கார்த்தி என்ற தனபால், 35 என்பவர், இளநீர் திருட ஏறியுள்ளார். இதைக்கண்ட நாய் குரைத்துள்ளது.
ஆத்திரமடைந்த தனபால், மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்து, தனது அரிவாளால், நாய் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். திருமுருகன், படுகாயமடைந்த நாயை, கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சிகிச்சை அளித்துள்ளார். திருமுருகன் அளித்த புகாரின் பேரில், நாயை கொல்ல முயற்சித்ததாக தொண்டாமுத்தூர் போலீசார், வழக்கு பதிவு செய்தனர். தனபாலை தேடி வருகின்றனர்.

