/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் தாலுகா அலுவலகங்களில் பார்வையிடலாம்

ADDED : டிச 18, 2025 05:04 AM
கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அவற்றை தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் தொகுதி வாரியாக பதிவேற்றும் பணி வேகமாக நடந்து வருகிறது.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் வரும் டிச., 19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்த வாக்காளர் பட்டியலை ஓட்டுச்சாவடிகள், தாலுகா அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மக்கள் பார்வையிடலாம்.
அதில் திருத்தம், முகவரி மாற்றம், புதிய சேர்த்தல் போன்றவற்றிற்கு, படிவங்களை பூர்த்தி செய்தும் ஜன.,15 வரை கொடுக்கலாம். ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவித்து விண்ணப்பிக்கலாம். இதையடுத்து பிப்.,16 அன்று, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்படும்.
மாவட்ட அளவில் சட்டசபை தொகுதி வாரியாக இறந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள், தேர்தல் கமிஷன் வெப்சைட்டில் வெளியிடப்படும். மாவட்ட அளவில், 18 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒரு ஓட்டு சாவடிக்கு, 800 முதல் 900 வாக்காளர்கள் வரையே இருப்பர். அதனால் ஓட்டுச்சாவடிகளில் ஓட்டு செலுத்த வருபவர்களுக்கு சிரமம் இருக்காது என்கின்றனர் தேர்தல் அலு வலர்கள்.