/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீரர், வீராங்கனைகளின் சாதிக்கும் கனவு; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் நிறைவேறும்
/
வீரர், வீராங்கனைகளின் சாதிக்கும் கனவு; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் நிறைவேறும்
வீரர், வீராங்கனைகளின் சாதிக்கும் கனவு; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் நிறைவேறும்
வீரர், வீராங்கனைகளின் சாதிக்கும் கனவு; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் நிறைவேறும்
ADDED : ஜன 07, 2025 07:11 AM
கோவை; கோவையில் டென்னிஸ், நீச்சல், 'ஸ்கேட்டிங்' போன்ற விளையாட்டுகளுக்கு கட்டமைப்பு வசதிகளை, எஸ்.டி.ஏ.டி., உருவாக்கினால், ஏழை மாணவர்களும் எதிர் காலத்தில் சாதிக்கவழிவகுக்கும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமானது (எஸ்.டி.ஏ.டி.,), மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்கான முக்கிய நிறுவனமாகவும், விளையாட்டு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை செயல்படுத்தும் அமைப்பாகவும் விளங்குகிறது.
வீரர், வீராங்கனைகளிடம் மறைந்துள்ள விளையாட்டு திறமைகளை கண்டறிந்து, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு முன்னேற்றம் அளிக்கும் வகையில் பயிற்சி, ஊக்குவிப்பு மற்றும் நிதியுதவி அளித்து வருகிறது.
மாவட்டந்தோறும் விளையாட்டுகளுக்கு, தேவையான கட்டமைப்புகளை நிறுவி புதிதாக விளையாட்டு வீரர்களை உருவாக்குவதுடன், திறமை உள்ளவர்களை ஊக்குவித்தும் வருகிறது. அந்த வகையில், சென்னையில் பெரும்பான்மையான போட்டிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அடுத்து, வளர்ந்த நகரான கோவையில் இங்கேயே பிறந்து, வீரர், வீராங்கனைகளாக உருவெடுத்தவர்கள், பிற மாவட்டங்களை காட்டிலும் அதிகமானோர் உள்ளனர். ஆனால், பல விளையாட்டுகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை.
இதனால், வெளியே பணம் கொடுத்து பயிற்சி பெறும் நிலை உள்ளது. சில விளையாட்டுகளில் பணம் இருப்பவர்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்ற நிலை உள்ளது. ஏழை மாணவர்கள் ஆயிரக்கணக்கில் பயிற்சி கட்டணம் செலுத்த முடியாது என்பதால், அவர்களது சாதனை இலக்கு தடைபடுகிறது.
என்னென்ன விளையாட்டு?
விளையாட்டு பயிற்சியாளர்கள் கூறியதாவது:
எஸ்.டி.ஏ.டி.,யின் கீழ் கோவை நேரு ஸ்டேடியத்தில் தடகளம், கால்பந்துக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அருகே மாநகராட்சி மைதானத்தில் வாலிபால், கூடைப்பந்து, ஸ்கேட்டிங் போட்டிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
டென்னிஸ், நீச்சல், ஷெட்டில் கோட், துப்பாக்கி சுடுதல், ஸ்கேட்டிங், பாக்சிங் உள்ளிட்டவற்றுக்கு தனியாரிடம் கட்டணம் செலுத்தி வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். டென்னிஸ் பயிற்சிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நீச்சல் பயிற்சிக்கு ரூ.5,000 வரையும், சிலம்பத்துக்கு ரூ.1,000 வரை என, ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஏற்ப பல்லாயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியுள்ளது.
சென்னையில் எஸ்.டி.ஏ.டி., சார்பில் எல்லா விதமான விளையாட்டுகளுக்கும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால், குறைந்த செலவிலும், சில விளையாட்டுகளுக்கு இலவசமாகவும் வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
அதேபோல், கோவையில் அனைத்துவிதமான விளையாட்டுகளுக்கும் கட்டமைப்பு வசதிகளை எஸ்.டி.ஏ.டி., மேம்படுத்தினால், ஏழை மாணவர்களின் சாதனை கனவு நனவாகும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.