ADDED : ஜன 11, 2025 09:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 50; கால் டாக்ஸி டிரைவர். உக்கடம், புல்லுக்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குடிபழக்கம் இருந்துள்ளது.
கடந்த 8ம் தேதி வடவள்ளியில் உள்ள தனது மகள் சசிகலாவை பார்க்க சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், வடவள்ளி, தொண்டாமுத்துார் சாலையில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று இருப்பதை பார்த்த பொது மக்கள், உள்ளே பார்த்த போது ஒருவர் காரில் அமர்ந்த நிலையில், உயிரிழந்து கிடந்தார்.
தகவல் அறிந்த போலீசார், விசாரணையில் அது மணிகண்டன் என தெரியவந்தது. உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

