ADDED : ஜூன் 26, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை வீரபாண்டி பிரிவு அருகே ஆர்.பி. நகரில் பால விநாயகர் கோவிலின் முதலாம் ஆண்டு விழா மற்றும் பேரூர் ஆதீனம் குரு மகா சன்னிதானம் அடிகளாரின் நுாற்றாண்டு விழாவை ஒட்டி திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது.
இதில், சிவனடியார் கூட்ட தலைவர் உதயகுமார் நிகழ்ச்சியை நடத்தினார். பொள்ளாச்சி சிவனடியார் கூட்டம் ராமலட்சுமி குழுவினர், 40 பேர் பங்கேற்று கும்மியாட்டம், பஜனை, கோலாட்டம் நிகழ்ச்சி நடத்தினர்.
தம்பு பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் கணேசன், தமிழ் ஆசிரியர் விவேகானந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.