ADDED : ஜூலை 21, 2025 10:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சிங்காநல்லுார் சித்தாண்டீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.
காலை, 7:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நடந்தது. தொடர்ந்து, 16 வகையான அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் சித்தாண்டீஸ்வரர் அருள்பாலித்தார். மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.