/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்பு பகுதியில் மரங்களில் தீ பரவியது; தீயணைப்புத்துறையினர் போராடி அணைப்பு
/
குடியிருப்பு பகுதியில் மரங்களில் தீ பரவியது; தீயணைப்புத்துறையினர் போராடி அணைப்பு
குடியிருப்பு பகுதியில் மரங்களில் தீ பரவியது; தீயணைப்புத்துறையினர் போராடி அணைப்பு
குடியிருப்பு பகுதியில் மரங்களில் தீ பரவியது; தீயணைப்புத்துறையினர் போராடி அணைப்பு
ADDED : மார் 17, 2024 11:59 PM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு - கொண்டம்பட்டி செல்லும் ரோட்டின் அருகே உள்ள இடத்தில், தீ பரவியதால் மக்கள் அவதி அடைந்தனர்.
கிணத்துக்கடவு - வடசித்துார் செல்லும் ரோட்டில், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த வழித்தடத்தில், தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. கோடை காலம் ஆரம்பமாகும் முன்னரே, வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது.
இதில், கொண்டம்பட்டியில் தனியார் நிறுவனத்தின் அருகே உள்ள காலி இடத்தில், ஏராளமான காய்ந்த மரங்களும், புற்களும் உள்ளது.
இந்த இடத்தில், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் அமர்ந்து, மது குடித்து விட்டு காலி மது பாட்டிலை எரிந்து செல்வதோடு, அதிகமாக பிளாஸ்டிக் குப்பையும் வீசிச்செல்கின்றனர். மேலும், இங்கு அமர்ந்து புகை பிடிப்பது போன்ற செயலிலும் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில், நேற்று இந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவ தொடங்கியது.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை ஏற்பட்டதை தொடர்ந்து, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை மறைத்தது.
அப்பகுதியினர் கிணத்துக்கடவு தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீயணைப்பு துறையினர் கூறுகையில், 'வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், காட்டுப்பகுதியில் உள்ள புற்கள் காய்ந்துள்ளது. இப்பகுதியில் யாரேனும் சிகரெட் அல்லது பீடியை அணைக்காமல் போட்டு சென்றிருக்கலாம் அல்லது வெயிலின் தாக்கத்திற்கு தீ பிடித்திருக்கலாம்' என்றனர்.

