ADDED : செப் 05, 2026 01:20 PM
அ நிறம் | அளவு
வெள்ளலுார்: உக்கடத்தில் மொத்த விற்பனை மார்க்கெட் செயல்படுகிறது. இங்கிருந்து மீன்களை வாங்கும் சில்லறை வியாபாரிகள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் விற்கின்றனர். இவ்வாறு விற்பனை செய்யப்படும் மீன்களின் தரம் குறைவாக உள்ளது.
விற்காத மீன்களை ஐஸ் பெட்டிகளில் வைக்கின்றனர். மறுநாள் இம்மீன்களை நல்ல மீன்களுடன் கலந்து விற்பதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி அனுராதா கூறுகையில், ‘‘புகாரின் அடிப்படையில் நேரடியாகச் சென்று மாதிரிகள் எடுக்கப்படும். அந்த மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். புகார் உண்மையானால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என தெரிவித்தார்.
