/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் நால்வர் பெருவிழா
/
மேட்டுப்பாளையத்தில் நால்வர் பெருவிழா
ADDED : ஜன 28, 2024 11:21 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையத்தில் நடந்த, நால்வர் பெருவிழாவில், சிவன், பார்வதி ஆகிய சுவாமிகள், சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மேட்டுப்பாளையத்தில், திருஞானசம்பந்தர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில், 11ம் ஆண்டு விழா மற்றும் நால்வர் பெருவிழா நடைபெற்றது.
காட்டூர் ஐயப்பன் பஜனை சமாஜம் மண்டபத்தில், சிவன், பார்வதி ஆகிய சுவாமிகளுக்கு மலர்களால், சிறப்பு அலங்காரம் செய்தனர்.
அதைத்தொடர்ந்து சுவாமி சிலைகளின் கீழே, ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நம்பிஆரூர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் அலங்காரம் செய்து, டிராக்டரில் ஏற்றி வைத்தனர்.
அதன் பின்பு அங்கிருந்து காட்டூர், மகாதேவபுரம், வனபத்ரகாளியம்மன் கோவில் சாலை வழியாக, எஸ்.எம்., நகரில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு, சுவாமியின் திருவீதி உலா சென்றது. ஊர்வலத்தின் முன் கைலாய வாத்தியங்கள் முழங்க, அதன் பின்னே சிவனடியார்கள், ஏராளமான பக்தர்கள் சென்றனர்.