/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
/
கொலை குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
ADDED : மே 08, 2025 12:58 AM
கோவை; குனியமுத்துார் பகுதியில், இளைஞரை கொலை செய்த இருவரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
குனியமுத்துார் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, மற்றொரு வாகனத்தில் உரசியதில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், குனியமுத்துாரை சேர்ந்த அசாருதீன் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில், குனியமுத்துார், கங்கா நகரை சேர்ந்த மன்சூர், 27, திருவள்ளுவர் நகரை சேர்ந்த சர்புதீன், 29 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் இதுபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கோவை மாநகர கமிஷனர் சரவண சுந்தருக்கு பரிந்துரைத்தனர். அதன் அடிப்படையில், பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷனர் உத்தரவிட்டார். சிறையில் இருக்கும் மன்சூர், சர்புதீன் ஆகியோரிடம் அதற்கான உத்தரவை போலீசார் வழங்கினர்.