தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பைக்கிடங்கு பிரச்னை உண்ணாவிரதம் வாபஸ்

குப்பைக்கிடங்கு பிரச்னை உண்ணாவிரதம் வாபஸ்

குப்பைக்கிடங்கு பிரச்னை உண்ணாவிரதம் வாபஸ்


ADDED : மார் 13, 2024 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போத்தனூர்;போத்தனூர் -- செட்டிபாளையம் சாலையில், ஸ்ரீராம் நகர் அருகே மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகம் உள்ளது. இதன் ஒரு பகுதியில், சுமார், 900 டன் குப்பை கழிவு கொட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புடன், மக்களுக்கு பலவித நோய்தொற்று ஏற்பட்டது. பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை.

மறுமலர்ச்சி மக்கள் இயக்க நிறுவன தலைவர் ஈஸ்வரன், 2013ல் வழக்கு தொடர்ந்தார். 2018-ல் ஓராண்டுக்குள் குப்பை கழிவை அகற்ற கோர்ட் உத்தரவு பிறப்பித்தும் நடவடிக்கை இல்லை.

முதல்வர் ஸ்டாலின் இன்று பொள்ளாச்சி, ஆச்சிபட்டியில் நடக்கும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக கோவை வரும் முதல்வர், குப்பை கிடங்கை பார்வையிட கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.

மாலை, 6:00 மணியை தாண்டியும் உண்ணாவிரதம் தொடர்ந்தது. மதுக்கரை தாலுகா தாசில்தார் சத்யன், மாநகராட்சி துணை கமிஷனர் சிவகுமார், போலீஸ் உதவி கமிஷனர் கரிகால் பாரி சங்கர், உள்ளிட்டோர், ஈஸ்வரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர் முத்துசாமியிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதியளித்ததால், இரவு, 9:00 மணிக்கு உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us