/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்
/
ஆசிரியர் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்
ADDED : ஜன 16, 2025 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தமிழ்நாடு விடியல் ஆசிரியர் முன்னேற்ற சங்க கிளை திறப்பு மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில்,மாவட்ட தலைவராக ஜெயபிரகாஷ், செயலாளர் தினேஷ்பாபு, மகளிரணி தலைவி சாந்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நிறைவில், 'ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் தமிழக முதல்வர் உடனடியாக வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் தவிர பிற பணிகள் வழங்கக் கூடாது. ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.