/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதாள சாக்கடை இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை; நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு
/
பாதாள சாக்கடை இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை; நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு
பாதாள சாக்கடை இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை; நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு
பாதாள சாக்கடை இணைப்புக்கு ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை; நிர்ணயித்து தமிழக அரசு உத்தரவு
ADDED : பிப் 16, 2025 11:58 PM
கோவை; கோவையில், சுய சான்றளிப்பு முறையில், கட்டட அனுமதி பெற, சதுரடிக்கு ரூ.88 வீதம் ஒருங்கிணைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை இணைப்புக்கு, 3,500 சதுரடி வரையிலான குடியிருப்புக்கு, ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், 2,500 சதுரடி வரையுள்ள மனையில், 3,500 சதுரடி வரையிலான குடியிருப்பு கட்டுமானங்களுடன், தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் அமைக்க, சுய சான்று அடிப்படையில், ஒற்றை சாளர முறையில் இணைய வழியில் கட்டட அனுமதி வழங்கப்படுகிறது.
இதற்கு, ஒருங்கிணைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இதர கட்டுமானங்களுக்கு கட்டணம் நிர்ணயிக்காமல் இருந்ததால், கட்டட அனுமதி வழங்குவதில் நிர்வாக சிக்கல் எழுந்தது. இதைத்தொடர்ந்து, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் கிரேடு வாரியாக கட்டணம் நிர்ணயித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகராட்சி பகுதியில், 3,500 சதுரடிக்கு மேல் உள்ள கட்டடங்களுக்கு சதுர அடிக்கு ரூ.88 ஒருங்கிணைப்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
குடியிருப்பு அல்லாத, இதர கட்டுமானங்களுக்கு ஒற்றை சாளர முறையில் கட்டடம் உரிமம் பெறுவதற்கு, மாநகராட்சி பகுதியில் சதுரடிக்கு ரூ.110 வீதம் ஒருங்கிணைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிலை, தேர்வு நிலை நகராட்சிகளில் ரூ.93, நிலை-1, நிலை-2 நகராட்சிகளில் ரூ.87 வீதம் வசூலிக்க வேண்டும்.
பாதாள சாக்கடை இணைப்பு பெற, வைப்புத்தொகை வசூலிக்கவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிகளில் 3,500 சதுரடிக்கு கீழுள்ள கட்டுமானம் குடியிருப்பாக இருப்பின் ரூ.10 ஆயிரம், குடியிருப்பு அல்லாத கட்டுமானத்துக்கு ரூ.20 ஆயிரம், 3,501 முதல், 10 ஆயிரம் சதுரடி வரையிலான குடியிருப்புக்கு ரூ.15 ஆயிரம், குடியிருப்பு அல்லாத கட்டுமானத்துக்கு ரூ.30 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து, 1 சதுரடிக்கு மேலுள்ள கட்டடங்களுக்கு ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்கள், இக்கட்டணம் நிர்ணயம் செய்வதில் இருந்து தளர்வு செய்யப்படுகிறது என, நிபந்தனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளது.
அதனால், மன்றத்தில் கட்டண விகிதங்களை மாற்றியமைக்க முடியாது; அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க முடியாது. மன்றத்தின் பார்வைக்கு மட்டுமே வைக்க முடியும் என்பதால், கவுன்சிலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.