/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காவலாளி அடித்து கொலை; தொழிலாளிக்கு ஆயுள்சிறை
/
காவலாளி அடித்து கொலை; தொழிலாளிக்கு ஆயுள்சிறை
ADDED : பிப் 01, 2024 05:42 AM
கோவை : காவலாளி அடித்து கொலை செய்யப்ப்பட்ட வழக்கில், தொழிலாளிக்கு ஆயுள்சிறை விதிக்கப்பட்டது.
கோவை, வெள்ளலுார் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் பால்ராஜ்,45; கூலித்தொழிலாளி. இவர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், கோபித்துக் கொண்டு, காட்டூர் மாநகராட்சி வணிக வளாகத்தில் இரவு நேரத்தில் துாங்கி வந்தார்.
ரத்னபுரி, சாஸ்திரி நகரை சேர்ந்த செல்வம்,50, அதே வணிக வளாகத்திலுள்ள கடையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். பால்ராஜ் துாங்கிக் கொண்டிருந்த போது, அவர் வைத்திருந்த பணத்தை செல்வம் திருடி விட்டதாக கூறி, சத்தம் போட்டுள்ளார்.
இதனால் 2020, டிச., 24ல், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது பால்ராஜ் ஆத்திரமடைந்து செல்வத்தை இரும்பு கம்பியால் அடித்து, கொலை செய்தார்.
காட்டூர் போலீசார் விசாரித்து, பால்ராஜை கைது செய்து, கோவை தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி (பொறுப்பு) சசிரேகா, குற்றம் சாட்டப்பட்ட பால்ராஜூக்கு ஆயுள்சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.