/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழைக்கு பின் துவங்கியது குளுகுளு சீசன்
/
பருவமழைக்கு பின் துவங்கியது குளுகுளு சீசன்
ADDED : அக் 08, 2025 10:39 PM

வால்பாறை; தமிழகத்தில், ஊட்டி, கொடைக்கானலையடுத்து, வால்பாறைக்கு அதிகளவில் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். வால்பாறையில் கடந்த நான்கு மாதங்களாக தென்மேற்குப் பருவ மழை பரவலாக பெய்தது. இதனால் வன வளம் பசுமையானதோடு, தேயிலை செடிகளும் துளிர்விட்டு பசுமையாக காட்சியளிக்கிறது.
தற்போது, மழைப்பொழிவு குறைந்த நிலையில், குளுகுளு சீசன் துவங்கியுள்ளது. சமவெளிப் பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், வால்பாறை சீசனை ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் திரண்டுள்ளனர்.
குறிப்பாக, எஸ்டேட் பகுதியில் காலை, மாலை நேரத்தில் படரும் பனிமூட்டத்தை சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர். நல்லமுடி காட்சி முனைப்பகுதியில் பனிபடர்ந்த பகுதியில் நின்று 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.