/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
/
பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தீவிரம்
ADDED : அக் 08, 2024 12:21 AM

பொள்ளாச்சி : வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு தேவையான, தளவாட பொருட்களை, பெரியாக்கவுண்டனுாரில் நெடுஞ்சாலைத்துறையினர் சேகரித்து வைத்தனர்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பருவமழையையொட்டி, கடந்த மாதம் அனைத்து ரோடுகளில் உள்ள பெரிய பாலங்கள், சிறிய பாலங்களில் நீர்வழிப்பாதை சுத்தம் செய்யப்பட்டு தண்ணீர் தடைபடாமல் செல்லும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இம்மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள சூழலில், மழை பாதிப்புகளை எதிர்கொள்ளவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் தலைமை பொறியாளர் உத்தரவிட்டனர்.
அதன்படி, பொள்ளாச்சி கோட்ட நெடுஞ்சாலைத்துறையினர் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டனர். தேவையான மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட தளவாடங்களை தயார் நிலையில், பொள்ளாச்சி - தாராபுரம் ரோட்டில் பெரியாக்கவுண்டனுாரில் சேகரம் செய்யப்பட்டுள்ளது.
இதை உதவி கோட்ட பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர் அருண்கார்த்திக் பார்வையிட்டு, ஊழியர்களிடம் உரிய அறிவுரைகளை வழங்கினர்.