ADDED : நவ 20, 2026 07:37 PM

அ நிறம் | அளவு
அன்னூர்:
வடக்கலூர் ஊராட்சி, மூக்கனூரில் இருந்து, ஆனையூர் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக, ஆலாங்குட்டை, அழகே பாளையம், சொலவம்பாளையம், செங்கப்பள்ளி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பாதை உள்ளது.
இந்த பாதையில் உள்ள பாலத்தில் நடுவில் துளை ஏற்பட்டுள்ளது. சாலையும் சேதமடைந்துள்ளது. மூக்கனூர் மக்கள், 'பழுதடைந்த பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
