/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனை கட்டட தளத்தை அதிகரிக்கணும்! கூடுதல் தலைமை செயலருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
/
மருத்துவமனை கட்டட தளத்தை அதிகரிக்கணும்! கூடுதல் தலைமை செயலருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
மருத்துவமனை கட்டட தளத்தை அதிகரிக்கணும்! கூடுதல் தலைமை செயலருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
மருத்துவமனை கட்டட தளத்தை அதிகரிக்கணும்! கூடுதல் தலைமை செயலருக்கு எம்.எல்.ஏ., கடிதம்
ADDED : டிச 06, 2024 11:26 PM
பொள்ளாச்சி; 'பொள்ளாச்சி அரசு மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில், தளத்தை உயர்த்தி கட்ட நிதி ஒதுக்க வேண்டும்,' என, மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலருக்கு, எம்.எல்.ஏ.,கடிதம் அனுப்பியுள்ளார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு, மகளிர் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவுக்கு பலஅடுக்கு மாடிகள் உயர்த்தி கட்டுவதன் வாயிலாக, பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை, கிணத்துக்கடவு பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் பயன்பெற முடியும். இது குறித்து எனது கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
புறநோயாளிகளுக்கான கட்டடம், 5ம் தளம் முதல், எட்டாம் தளம் வரை உயர்த்திக்கட்ட வேண்டும். தாய் சேய் நல சேவை கட்டடம், 3ம் தளம் முதல், 5ம் தளம் வரை உயர்த்தி கட்ட வேண்டும்.
தமிழக அரசும், பொதுப்பணித்துறை கட்டடங்கள், தேசிய நல்வாழ்வு மையம் முதன்முதலில் கட்டடம் கட்ட துவங்கும் முன், மகளிர், குழந்தைகள் நலப்பிரிவுக்கு ஐந்து மாடி கட்டடம் கட்டுவதற்கும், புறநோயாளிகள் பிரிவுக்கு, எட்டு மாடிகள் கட்டுவதற்கும் திட்டங்கள் தயார் செய்யப்பட்டன. அதற்கேற்ப, தரை தளங்களும், உறுதியான துாண்களும் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது.
ஆனால், தற்போது புறநோயாளளிகளுக்கு ஒன்றாம் தளம் முதல் நான்காம் தளம், மகளிர் மற்றும் குழந்தைகள் நலப்பிரிவுக்கு, முதல், 2ம் தளம் வரை உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.
போதிய கட்டட வசதியில்லாததால், புற நோயாளிகள், மகப்பேறு பெண்கள் சிரமப்படுகின்றனர். உரிய நேரத்தில் சரியான சிகிச்சை பெற முடிவதில்லை.
எனவே, புறநோயாளிகள் பிரிவு, தாய் சேய், குழந்தைகள் பிரிவு கட்டடத்தின் தளங்களை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.