/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனுார் பள்ளத்தில் கிடக்குது வீடு; மழை வந்தால் நாறப்போகுது ஊரு
/
சங்கனுார் பள்ளத்தில் கிடக்குது வீடு; மழை வந்தால் நாறப்போகுது ஊரு
சங்கனுார் பள்ளத்தில் கிடக்குது வீடு; மழை வந்தால் நாறப்போகுது ஊரு
சங்கனுார் பள்ளத்தில் கிடக்குது வீடு; மழை வந்தால் நாறப்போகுது ஊரு
ADDED : மே 17, 2025 01:21 AM

கோவை : கடந்த ஜனவரி மாதம் சங்கனுார் பள்ளத்தில், இடிந்து விழுந்த வீடு இன்னும் அகற்றப்படாமல் கிடக்கிறது. பருவ மழை பெய்து, சங்கனுார் பள்ளத்தில் தண்ணீர் வருவதற்கு முன், அக்கட்டடத்தை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை நகர் பகுதியில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேட்டுப்பாளையம் ரோடு - சத்தி ரோடு - அவிநாசி ரோடு - திருச்சி ரோட்டை இணைக்கும் வகையில், சங்கனுார் பள்ளத்தின் கரையை பலப்படுத்தி, இருபுறமும் தலா, 5.5 மீட்டர் அகலத்துக்கு தார் ரோடு போட்டு, அரை வட்டச்சாலை உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, 49 கோடி ரூபாய் ஒதுக்கி, எருக் கம்பெனியில் இருந்து, 2.5 கி.மீ., துாரத்துக்கு கரையை பலப்படுத்தி, கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வந்தது.
68வது வார்டு, ஹட்கோ காலனி புது அண்ணா வீதியில், கரையில் இருந்த மூன்று ஆக்கிரமிப்பு வீடுகள், ஜன., 20ம் தேதி இரவு இடிந்து விழுந்தது. அவ்வீடுகளில் வசித்தவர்களுக்கு, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, மாற்று வீடுகள் வழங்கப்பட்டன.
சங்கனுார் பள்ளத்துக்குள் கான்கிரீட் வீடு விழுந்து, நான்கு மாதங்களாகி விட்டன. இன்னும் அவ்வீடு மற்றும் கட்டட இடிபாடுகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றாமல் இருக்கின்றனர்.
இதன் காரணமாக, அப்பகுதியில், 300 மீட்டர் துாரத்துக்கு ஓடையில் தடுப்புச்சுவர் கட்டப்படாமல் இருக்கிறது.
தென்மேற்கு பருவ மழை பெய்து, சங்கனுார் பள்ளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன், இடிந்து விழுந்த வீட்டை அகற்ற, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.