/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மத்திய, மாநில அரசு திட்டத்தில் கட்டிய வீடுகள் முன்மாதிரியானது!: அடிப்படை வசதிகள் பூர்த்தியான குடியிருப்பானது
/
மத்திய, மாநில அரசு திட்டத்தில் கட்டிய வீடுகள் முன்மாதிரியானது!: அடிப்படை வசதிகள் பூர்த்தியான குடியிருப்பானது
மத்திய, மாநில அரசு திட்டத்தில் கட்டிய வீடுகள் முன்மாதிரியானது!: அடிப்படை வசதிகள் பூர்த்தியான குடியிருப்பானது
மத்திய, மாநில அரசு திட்டத்தில் கட்டிய வீடுகள் முன்மாதிரியானது!: அடிப்படை வசதிகள் பூர்த்தியான குடியிருப்பானது
ADDED : பிப் 12, 2026 05:18 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில், புதிதாக கட்டும் அரசு திட்ட வீடுகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் முழுமை அடைந்துள்ளது. ஒன்றியத்தின் முன்மாதிரியான பணியாக கருதி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இதில், ஒரு சில குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்புகள் குறைவாக இருப்பதால், மக்கள் கிராமங்களில் இருந்து நகர பகுதிகளுக்கு இடம்பெயறும் நிலை உள்ளது.
இந்நிலையில், வடசித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பபாளையம் கிராமத்தில், கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 5 முதல் 10 குடும்பங்கள் மட்டுமே வசித்து வந்தனர்.
அவசர உதவிக்கு மருத்துவமனை செல்ல கார், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களை அழைத்தாலும், குரும்பபாளையம் கிராமம் எங்குள்ளது என, கேட்கும் நிலையே இருந்தது.
இதே போன்று, நல்லட்டிபாளையம் ஊராட்சி பட்டணம் கிராமத்தில் மக்கள் தொகை ஓரளவில் இருந்தாலும், இங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக இருந்தது.
இந்த இரு கிராமங்களிலும் பல்வேறு அரசு திட்டத்தில் மக்களுக்கு தேவையான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள், ஒன்றிய நிர்வாகம் சார்பில் தற்போது செய்து முடிக்கப்பட்டுள்ளது.
பட்டணம் கிராமத்தில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் வாயிலாக, ஒரு வீட்டிற்கு, 2.80 லட்சம் ருபாய் என, 18 வீடுகள், 50.40 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், ஒரு வீட்டிற்கு, 3.5 லட்சம் ரூபாய் என, 19 வீடுகளுக்கு, 66.50 லட்சம் ரூபாய் மதிப்பிலும் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஊராட்சி நிதியில் கான்கிரீட் சாலை, குழாய் அமைத்தல் மற்றும் வீடுகளுக்கு குடிநீர் வழங்குதல் பணிகளும், மாவட்ட ஊராட்சி நிதியில் வடிகால் வசதி, எம்.எல்.ஏ., நிதியில் சோலார் தெரு விளக்குகள் உள்ளிட்ட பணிகள், 37.93 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குரும்பபாளையம் கிராமத்தில், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் வீட்டிற்கு - 2.70 லட்சம், பசுமை வீடுகள் திட்டத்தில் வீட்டிற்கு 2.10 லட்சம், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீட்டிற்கு 3.50 லட்சம், இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டத்தில் தலா, 1.70 லட்சம் என, அரசு திட்டங்கள் வாயிலாக, 25 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இங்கு, கான்கிரீட் சாலை, அணுகு சாலை, தெரு விளக்கு, குரும்பபாளையத்தில் இருந்து வடசித்தூர் ரோடு வரை குடிநீர் குழாய் பதிப்பு பணிகள், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை தண்ணீர் தொட்டி, வடிகாலுடன் கூடிய சிறு பாலம் உள்ளிட்ட வசதிகள், 86.58 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த இரு கிராமங் களிலும், ஒவ்வொரு வீட்டிற்கும், 2 மரக்கன்றுகள் மற்றும் ரோட்டின் இரு புறமும், மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை ஒன்றியத்தின் முன்மாதிரியான பணியாக கருதி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

