/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை சிறப்பு முகாம் அழைப்பிதழ் 'ரெடி'
/
நாளை சிறப்பு முகாம் அழைப்பிதழ் 'ரெடி'
ADDED : ஜூலை 15, 2025 09:58 PM
அன்னுார்; தமிழக அரசு 'உங்களுடன் ஸ்டாலின்' என்னும் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில், அன்னுார் பேரூராட்சியில், கவுண்டம்பாளையம், செல்லனுர், அல்லிகுளம், நாகமாபுதூர், குன்னத்தூராம் பாளையம் மற்றும் அன்னுார் நகரைச் சேர்ந்த ஒன்று முதல் எட்டு வார்டுகளுக்கான முகாம் வருகிற 17ம் தேதி அன்னுார் தாசபளஞ்சிக மண்டபத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் 15 துறை அதிகாரிகள் 46 சேவைகளை வழங்க உள்ளனர்.
இதற்காக பேரூராட்சி சார்பில் தன்னார்வலர்கள், ஒன்று முதல் எட்டாம் வார்டு வரை உள்ள 3,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று முகாம் குறித்த அழைப்பிதழ் மற்றும் விண்ணப்பங்களை விநியோகித்தனர்.
தங்கள் கோரிக்கைகள், குறைகள் குறித்து உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.