/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாய்ந்த நிலையில் பாலத்தின் இரும்பு சட்டம்
/
சாய்ந்த நிலையில் பாலத்தின் இரும்பு சட்டம்
ADDED : ஜூலை 10, 2025 08:07 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, இம்மிடிபாளையம் செல்லும் வழியில் ரயில்வே பாலம் அருகே உள்ள கம்பு சட்டம் சாய்ந்த நிலையில் உள்ளது.
கிணத்துக்கடவு மயானம் வழியாக, இம்மிடிபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி கிராமங்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இதில், ரயில்வே பாலம் அருகில் உள்ள இரும்பு சட்டம் சாய்ந்த நிலையில் உள்ளது.
உயரம் அதிக உள்ள கனரக வாகனங்கள் இவ்வழியாக செல்லும் போது, இந்த இரும்பு சட்டத்தில் உரச வாய்ப்புள்ளது. மேலும், இந்த இரும்பு சட்டம் ஒரு பக்க பிடிமானத்தில் மட்டுமே உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே சாயும் நிலையில் உள்ளது.
இதனால், இந்த வழித்தடத்தில் வாகன ஓட்டுநர்களும், பொதுமக்களும் அச்சத்துடன் பயணிக்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இதை அதிகாரிகள் கவனித்து உடனடியாக இரும்பு சட்டத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.