/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்கனூர் வாய்க்கால் இரும்பு ஷட்டர் 'அபேஸ்': வெளிச்சம் இல்லாததால் மாயமான அவலம்
/
சங்கனூர் வாய்க்கால் இரும்பு ஷட்டர் 'அபேஸ்': வெளிச்சம் இல்லாததால் மாயமான அவலம்
சங்கனூர் வாய்க்கால் இரும்பு ஷட்டர் 'அபேஸ்': வெளிச்சம் இல்லாததால் மாயமான அவலம்
சங்கனூர் வாய்க்கால் இரும்பு ஷட்டர் 'அபேஸ்': வெளிச்சம் இல்லாததால் மாயமான அவலம்
ADDED : ஜன 30, 2024 12:13 AM
கோவை;சங்கனுார் வாய்க்காலையொட்டி கிடந்த, 400 கிலோ இரும்பு ஷட்டர் மாயமாகியுள்ள நிலையில், அப்பகுதியில் தெரு விளக்கு போன்ற பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த, கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் அடுத்த அல்வேர்னியா பள்ளி அருகே, திருச்சி ரோட்டை கடக்கும் சங்கனுார் வாய்க்கால் வயல்வெளிகள் வழியாக பல கி.மீ., பயணித்து, சிங்காநல்லுார் குளத்தை அடைகிறது.
இந்த வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பு காரணமாக, மழை காலங்களில் கரையில் உடைப்பு ஏற்பட்டு, விளை நிலங்களில் தண்ணீர் புகுவது தொடர்கதையாக உள்ளது.
மாநகராட்சி, 61வது வார்டு கள்ளிமடை கருப்பராயன் கோவில் பின்புறம் செல்லும் இந்த வாய்க்காலுடன், அப்பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கும் விதமாக, மெயின் ரோட்டில் இருந்து, 50 மீட்டர் துாரத்துக்கு, வடிகால் அமைப்பு இருந்தது.
இதில் இருந்த மதகில் சுமார், 400 கிலோ அளவுக்கு தண்ணீர் திறந்துவிடும் இரும்பு ஷட்டர் பொருத்தப்பட்டிருந்தது. இம்மழைநீர் வடிகால் கட்டமைப்பு இடிந்து, தண்ணீர் பயணிக்க முடியாமல் இருப்பதால், ஆறு மாதங்களுக்கு முன்பு மதகில் இருந்த இரும்பு ஷட்டர் தனியே எடுத்து வைக்கப்பட்டிருந்தது.
அவ்வழியில் தெரு விளக்கு வசதிகள் இல்லாததை சாதகமாக்கி மர்ம நபர்கள், 400 கிலோ இரும்பு ஷட்டரை திருடிச்சென்று விட்டனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், 'திருட்டை தடுக்க, தெரு விளக்குகள் பொருத்த வேண்டும்.
இங்குள்ள வாய்க்கால் வளைவில், மழைகாலங்களில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க, தடுப்பு சுவர் உயர்த்தி கட்டவும், மாநகராட்சி முன்வர வேண்டும்' என்றனர்.