/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூட்டுக்குடும்பத்தின் சுவை உணர்த்திய கஞ்சப்பள்ளி கருப்பநாடார் குடும்பத்தினர்!
/
கூட்டுக்குடும்பத்தின் சுவை உணர்த்திய கஞ்சப்பள்ளி கருப்பநாடார் குடும்பத்தினர்!
கூட்டுக்குடும்பத்தின் சுவை உணர்த்திய கஞ்சப்பள்ளி கருப்பநாடார் குடும்பத்தினர்!
கூட்டுக்குடும்பத்தின் சுவை உணர்த்திய கஞ்சப்பள்ளி கருப்பநாடார் குடும்பத்தினர்!
ADDED : ஆக 31, 2025 07:58 AM

வா ழ்க்கையில் கடந்து வந்த பாதையை, 'ரீவைண்ட்' செய்து பார்க்கும் அதிர்ஷ்டம், எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
அன்னுார் அருகே கஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கருப்பநாடார் குடும்பத்தினருக்கு, அப்படி ஒரு அபூர்வ வாய்ப்பு கிடைத்தது.
சுந்தராபுரம் செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில், சந்தித்து அந்த வாய்ப்பை ஆசைத்தீர பயன்படுத்திக் கொண்டனர். கருப்பநாடாரின் எட்டாவது தலைமுறை வரை பங்கேற்ற, இந்த கூட்டுக் குடும்பம் நிகழ்ச்சி, காய்ந்து போன நாற்று, மழையில் துளிர் விடும் போது பிறக்கும் உற்சாகத்தை, ஒவ்வொருவருக்கும் தந்தது.
போத்தனுாரில் வசிக்கும் கருப்பநாடாரின் கொள்ளுப்பேரன் முருகேசன், செங்கோட்டையா பள்ளியின் முன்னாள் மாணவர்.
இவர்தான் இந்த அபூர்வ சந்திப்பின் பின்னணி. சந்திப்பதென முடிவு எடுத்ததும், வேலைகள் பரபரவென நடந்தன. அத்தனை பேரையும் ஒன்று சேர்க்க, வாட்ஸ் --அப்' குழுக்கள் உருவாயின.
வாங்க மறுபடியும் பிறப்போம்' என்று அழைக்க, 375 பேர் கொண்ட குடும்பத்தினர் ஓரிடத்தில் சங்கமித்தனர். குடும்பங்கள் இணைந்தால், மகிழ்ச்சிக்கு எல்லை ஏது...
அம்மா குளிப்பாட்டி விட... சித்தி தலை சீவ... பெரியம்மா ஊட்டி விட... குழந்தைகளுக்கு கூட்டுக்குடும்பத்தின் நன்னெறியை கற்றுத்தந்த நாட்களை, ஒன்று கூடிய ஒருவரும் மறக்கவில்லை. ஆரத்தழுவி கொண்டாடித்தீர்த்தனர்.
'உனக்கு பின்னால் ஒரு கூட்டம் இருக்கிறது' என்று, நம் குழந்தைகளுக்கு நம்பிக்கையுடன் கூறிச்செல்ல, பாடம் நடத்தியது கஞ்சப்பள்ளி கருப்பநாடார் குடும்ப சந்திப்பு!

