sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா கோலாகலம்

/

மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா கோலாகலம்

மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா கோலாகலம்

மாசாணியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா கோலாகலம்


ADDED : டிச 11, 2024 09:43 PM

Google News

ADDED : டிச 11, 2024 09:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 14 ஆண்டுக்கு பிறகு கும்பாபிேஷகம் நடக்கிறது.

* அறங்காவலர்கள் குழு, கோவில் திருப்பணிகளில் கவனம் செலுத்தி தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

* கோவில் முறைதாரர்கள் கோவில் கும்பாபிேஷக விழா பணியில் ஈடுபடுத்தி முன்னேற்றபாடுகளில் கவனம் செலுத்தியுள்ளனர்.

* ராஜ கோபுரம், உள்ளிட்ட கோபுரங்கள், புதிய வர்ணங்கள் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

* கோவில் உட்புறத்திலும், வர்ணங்கள் பூசப்பட்டு, புதிய தோற்றத்துடன் மாற்றப்பட்டுள்ளது.

* கோவில் உட்புறத்தில் உள்ள கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பட்டு ஜொலிக்கிறது.

* கருவறை பகுதி புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

* கோவிலில், அம்மனுக்கு எதிரே உள்ள மகாமுனிஸ்வரர், பிரகாரத்தில், பேச்சி அம்மன், துர்க்கை அம்மன், மகிஷாசூர வர்த்தினி, சப்த மாதாக்கள், விநாயகர், கருப்பராயர், புவனேஸ்வரி, பைரவர் சன்னதிகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

* புதுப்பிக்கப்பட்ட கருவறையில் உள்ள அம்மன், சன்னதிகளில் உள்ள சுவாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.

* கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள், கோவில் முகப்பு பகுதி என அனைத்து இடங்களிலும், வண்ண, வண்ண மின் விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.

* யாக சாலைகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், தினமும் வேதபாராயணம், ேஹாமங்கள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

* பொதுமக்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

* கோபுரம் உள்ளிட்ட மேற்பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

* வி.வி.ஐ.பி., வி.ஐ.பி.,க்கள் வந்து செல்லவும், பொதுமக்கள் வந்து செல்ல வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

* கோபுரத்தில் இருந்து கீழ் வரை, பொதுமக்கள் நிற்கும் பகுதியை, ஏ, பி, சி, என வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

* தீயணைப்புத்துறையினரும், வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

* அம்மனை தரிசிக்க பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவதால் அதற்கேற்ப வசதிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

* கோவிலில் பக்தர்கள் வசதிக்காக புதியதாக படித்துறை அமைக்கப்பட்டுள்ளது. படித்துறைக்கு இருபுறமும் கைப்பிடிகளும் அமைக்கப்பட்டு புதியதாக மாற்றப்பட்டுள்ளது.

* கோவிலில் ஓய்வு எடுக்க பக்தர்களுக்கு ஓய்வு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us