/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் 33 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷகம் வரும் பிப்., 3ல் நடக்கிறது
/
தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் 33 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷகம் வரும் பிப்., 3ல் நடக்கிறது
தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் 33 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷகம் வரும் பிப்., 3ல் நடக்கிறது
தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் 33 ஆண்டுக்கு பின் கும்பாபிேஷகம் வரும் பிப்., 3ல் நடக்கிறது
ADDED : ஜன 30, 2025 11:16 PM

ஆனைமலை:ஆனைமலையில், 33 ஆண்டுகளுக்கு பின், தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் வரும், 3ம் தேதி கும்பாபிேஷக நடக்கிறது.
ஆனைமலையில், ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிேஷகம் நடந்து, 33 ஆண்டுகள் ஆகியது; கோவில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.
கோவிலை புனரமைத்து, கும்பாபிேஷகம் நடத்த திருப்பணிக்குழுவினர் முடிவு செய்து, கடந்த, 2020ம் ஆண்டு விமான பாலாயம் செய்யப்பட்டது. அதன்பின், தொல்லியல் துறை, ஹிந்துசமய அறநிலையத்துறை மாநில குழுவிடம் முறையான அனுமதி பெறப்பட்டது.
கடந்த, 2022ம் ஆண்டு மற்ற சன்னதிகளுக்கு பாலாலயம் நடத்தப்பட்டு புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, கோவில் விமானம், சன்னதிகள், சுவாமி சிலைகள் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்., 3ம் தேதி கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர், திருப்பணிக்குழுவினர் முடிவு செய்தனர்.
கும்பாபிேஷக விழா பிப்., 1ம் தேதி மதியம், 2:00 மணிக்கு முளைப்பாளிகை, தீர்த்த குடம், சீர்தட்டு வாத்தியத்துடன் அழைத்து வரப்படுகிறது. மாலையில், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அஷ்டதிக்பாலகர் பூஜை, முதற்கால யாக பூஜை, வேதபாராயணம், 108 மூலிகை திரவிய ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.
2ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜை, கலச பூஜை, கணபதி ேஹாமம், சுதர்சன ேஹாமம், மஹாலட்சுமி ேஹாமம், நரசிம்ம ேஹாமம், நட்சத்திர ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு ேஹாமங்கள், நடக்கிறது. மதியம், விமான கலசம் யந்திர பிரதிஷ்டை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, நடக்கிறது. இரவு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
பிப்., 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை, 9:15 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, மகாகணபதி, தர்மராஜா, திரவுபதி அம்மனுக்கு மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. மதியம், மூல மூர்த்திகளுக்கு திருக்கல்யாண வைபவமும், மாலையில் சுவாமிகள் திருவீதி உலாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாட்டினை, கோவில் அறங்காவலர் செந்தில்வேல், ஆய்வாளர் சித்ரா மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.