/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளங்கலை படிப்புகளுக்கு வரும் 27ம் தேதி கடைசிநாள்
/
இளங்கலை படிப்புகளுக்கு வரும் 27ம் தேதி கடைசிநாள்
ADDED : மே 22, 2025 11:38 PM
கோவை : கோவை அரசு கலைக் கல்லுாரியில், இளங்கலை பாடப்பிரிவுகளில் 1,727 இடங்களுக்கான சேர்க்கை நடந்து வருகிறது.
மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கல்லுாரியில் நேரடியாக வழங்கப்படமாட்டாது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் பெற மாணவர்கள், பெற்றோர் நேரடியாக கல்லுாரிக்கு வரத்தேவையில்லை என, கல்லுாரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை தகவல் மையம் செயல்படும். இம்மையம் வாயிலாக மாணவர்கள், சேர்க்கை தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
வரும், 27ம் தேதி இறுதி நாள் என்பதால் மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்க கல்லுாரி முதல்வர் எழிலி அறிவுறுத்தியுள்ளார்.