/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நிறைவேறியது நீண்டநாள் கோரிக்கை கடம்பன் கோம்பை மக்கள் மகிழ்ச்சி
/
நிறைவேறியது நீண்டநாள் கோரிக்கை கடம்பன் கோம்பை மக்கள் மகிழ்ச்சி
நிறைவேறியது நீண்டநாள் கோரிக்கை கடம்பன் கோம்பை மக்கள் மகிழ்ச்சி
நிறைவேறியது நீண்டநாள் கோரிக்கை கடம்பன் கோம்பை மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 21, 2025 04:41 AM

கோவை : கடம்பன்கோம்பை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான, நடமாடும் ரேஷன் கடை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
காரமடை ஊராட்சி ஒன்றியம், நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்பட்ட கடம்பன்கோம்பை மலைப்பகுதியில், மழைவாழ் மக்கள், 25 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இவர்கள், பில்லுார் அத்திக்கடவு பகுதியில், மகளிர் சுய உதவிக்குழுவினரால் நடத்தப்பட்டு வந்த ரேஷன் கடையில், பொருட்கள் வாங்கி வந்தனர்.
ரேஷன் பொருட்களை, 15 கி.மீ., துாரம், ஜீப் வாயிலாகவும், தலைச்சுமையாகவும் எடுத்து சென்று சிரமத்துக்கு ஆளாயினர். ஜீப் ஒன்றுக்கு ரூ.1,500 கொடுத்து பொருட்களை கொண்டு செல்ல வேண்டியிருந்ததால், தமிழக அரசின் வாயிலாக, நகரும் ரேஷன் கடை இப்பகுதிக்கு வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர்.
இவர்களின் சிரமத்தை போக்க, இந்த ரேஷன் கடை, கூட்டுறவுத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. வெள்ளியங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பாக, நடமாடும் ரேஷன் கடை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேரடியாக ரேஷன் பொருட்கள், அவர்களின் இருப்பிடத்துக்கே, வாகனம் வாயிலாக கொண்டு சென்று வழங்கப்பட்டது.
தங்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்காக, கடம்பன் கோம்பை மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

