/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோலமிட்டு அபார்ட்மென்ட் வாசகியர் மாயாஜாலம்!
/
கோலமிட்டு அபார்ட்மென்ட் வாசகியர் மாயாஜாலம்!
UPDATED : ஜன 05, 2026 06:01 AM
ADDED : ஜன 05, 2026 05:58 AM

கோவை: கோவையில் 'தினமலர்' நாளிதழின் 'மார்கழி விழாக்கோலம்' போட்டி, அபார்ட்மென்ட்களில் வசிக்கும் நம் வாசகியருக்காக நடத்தப்படுகிறது. வாசகியர், குட்டீஸ் அதிகளவில் பங்கேற்று அசத்தி வருகின்றனர்.
மில்லேனியல் சிட்டி அபார்ட்மென்ட் நேற்று வெள்ளக்கிணறு பிரிவு மில்லேனியல் சிட்டி அபார்ட்மென்டில் கோலப் போட்டி நடத்தப்பட்டது. வாசகியர் ஆர்வமாக பங்கேற்றனர்.
சிவலிங்கத்தின் அருகே பாம்பு இருப்பது போன்ற கோலம், விஷ்ணுவின் கண், நீருக்குள் அழியாமல் கலை நயத்துடன் கூடிய ஓவியம், உலகம் மேன்மையடைய ஆசிர்வாதம் செய்யக் கூடிய பாடலுக்கு, இலக்கணமான கோலம் உட்பட பல கோலங்கள் வியப்பில் ஆழ்த்தின.
புள்ளி கோலம் பிரிவில், செல்லம்மாள், இந்து ரவிக்குமார், சரண்யா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர். அத்தப்பூ கோலப்பிரிவில் புவனேஸ்வரி, சிவகாமி முதல் இரண்டு இடங்கள், ரங்கோலி பிரிவில், சுவாதி, சுமதி, புவன் ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர்.
ஆறுதல் பரிசுக்கு, சவுமியா, காயத்ரி, நிவேதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கும், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும், அபார்ட்மென்ட் தலைவர் தாமோதரன், செயலர் கார்த்திக், துணை பொருளாளர் பிரசன்ன வெங்கடேஷ்வரலு ஆகியோர் பரிசு வழங்கினர்.
கொண்டாட்ட மனநிலை விளாங்குறிச்சி ரோடு தண்ணீர் பந்தல் அருகில் உள்ள, மான்செஸ்டர் சிதாரா அபார்ட்மென்ட், அழகிய கோலங்களால் கை கொடுத்து, kolam offers benefits for mind, body and spirit என்ற வாசகத்துடன் வரவேற்றது.
வணங்க செய்த சிவலிங்கம், பூக்கோல விநாயகர், கொண்டாட்ட மனநிலை கொண்ட கோலம் உட்பட வித்தியாச கோலங்கள், அடடா... என்ன ஒரு சிந்தனை என்ற மகிழ்ச்சிக்கு வித்திட்டது.
புள்ளி கோலம் பிரிவில், சாத்யா, சுபா, அத்யான்ந்த், ரங்கோலி பிரிவில் தீக் ஷா, ராஜலட்சுமி, ஜெயந்தி, அத்தப்பூ கோலம் பிரிவில் சஹானா, பிரேமலதா, வசந்தி ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர்.
ஆறுதல் பரிசுக்கு, ஷான்வி, கோபிகா தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கும், பங்கேற்ற அனைவருக்கும், அபார்ட்மென்ட் தலைவர் செயலாளர் யுவராஜன், பொருளாளர் ஜெயஸ்ரீ, ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா ஆகியோர் பரிசு வழங்கினர். இந்த இரு அபார்ட்மென்ட்களில், நடுவர்கள் புவனேஸ்வரி, நயன்தாரா ஆகியோர் பரிசுக்கு உரியவர்களை தேர்வு செய்தனர்.
மனதை அள்ளிய கோலங்கள் கணபதி திருப்தி அபார்ட்மென்டில், புள்ளி கோலம் வரவேற்றது. பொங்கல் மற்றும் குடியரசு தின வாழ்த்துகள் சொல்லியது ஒரு கோலம். வேலும், மயிலும் கொண்ட கோலம் வணங்க வைக்க, மலர்களின் சங்கமத்தில் வாசம் வீசிய கோலம் மயங்க வைக்க, பட்டுப்பாவாடையில் சிறுமி நின்றிருக்கும் கோலம், வாவ்... என்று சொல்ல வைத்தது.
கார்ட்டூன் கோலம், நம்மை சிறு பருவத்துக்கே அழைத்து சென்றது. இப்படியாக வரிசை கட்டிய கோலங்கள், புருவத்தை உயர்த்த வைத்தன.
நடுவர்களாக சாய்கீதா, பிரியா ஆகியோர் கோலங்களை தேர்வு செய்தனர். பூக்கோலம் பிரிவில் வான்மதி, சாந்தி, ரேகா, புள்ளி கோலத்தில், ஹர்சனா, அனுராதா, ரங்கோலி பிரிவில், ரோஹினி, விஜயலட்சுமி, கவி ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பெற்றனர். ஆறுதல் பரிசுக்கு, செண்பக பூங்குழலி, நிர்மலா, மகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும், அபார்ட்மென்ட் துணை தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சிந்து மோகன், பொருளாளர் ஷைலஜா லட்சுமிகாந்த், ஒருங்கிணைப்பாளர் கவுதமி ஆகியோர் பரிசு வழங்கினர்.
கோலப் போட்டிகளை, 'தினமலர்' நாளிதழுடன், போத்தீஸ், கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி, ஓட்டல் ஆனந்தாஸ் மற்றும் யாழி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

